Tuesday 26 June 2012

அன்பான வேண்டுகோள்


தொண்டி கிளை சார்பாக வாரந்தோறும் ஒவ்வொருத் தெருவாரியாக பெண்கள் பயான்கள், ஊரில் நடைபெறும் இணைவைத்தல், அனாச்சாரங்களை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் மக்களுக்கு தூய இஸ்லாத்தை தெரியப்படுத்துதல். 


மாற்றுமத மக்களுக்கும் இஸ்லாத்தை கூறவேண்டும் என்ற அடிப்படையில் ஏசு அழைக்கிறார் என்ற தலைப்பில் சுவரொட்டிகள் தொண்டியை சுற்றியுள்ள கிருத்தவ கிராமங்களிலும் ஒட்டப்பட்டு அவர்களுக்கு வேண்டிய குரான், இஸ்லாம் சம்மந்தமான புத்தகங்கள், DVD இலவசமாக மாற்றுமத மக்களுக்கு வழங்கப்படுகிறது.

ஐவேலை மற்றும் ஜூம்மா தொழுகை, பள்ளி மாணவ, மாணவியருக்கான பெண்களுக்கு பெண் ஆலிமாவை வைத்தும், ஆண்களுக்கு ஆண் ஆலிமை வைத்தும் ஆரம்பப பாடசாலை நடத்தப்படுகிறது.

நமது கிளை சார்பாக புதிய மர்க்கஸ் பெரியதாக இருப்பதால் பராமரிப்புச் செலவுகளும் மேல்குறிப்பிட்ட அனைத்து செயல்பாடுகளுக்கும் பொருளாதாரம் இருந்தால்தான் அதிகமான செயல்பாடுகள் செய்ய இலகுவாக இருக்கும். எனவே இதைப்பார்க்கும் உள்நாடு, வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களுடைய பொருளாதார உதவியை தொண்டி கிளைக்கு தாராளமாக தந்து உதவவும்.

Tuesday 12 June 2012

கந்தூரி விழாவை எதிர்த்து

திணறியது தொண்டி!     மழுங்கியது மழுங்கு அப்பா கந்தூரி!!


அல்லாஹ்வின் பேரருளால் ஏகத்துவ கொள்கை முழக்கம் தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கும் எழுச்சி பெற்று வரும் வேளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஏகத்துவ எழுச்சிக்கு அல்லாஹ் வெற்றியை தந்து கொண்டிருக்கிறான் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கேதொண்டியினுடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தொண்டியில் இணை வைப்புக்கு எதிராக களம் இறங்கி வெள்ளி அன்று மிகப்பெரிய விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.05.06.12அன்று தொண்டியின் வட பகுதியில் உள்ள மழுங்கு சாகிபு தர்கா கந்தூரி நடை பெற இருந்தது இந்த கந்தூரி விழாவில் வான வேடிக்கைகளும்சந்தன குடம் எடுத்து அந்த சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது என்பதை அறிந்து வடக்கு தெருவை சார்ந்த கொள்கை சகோதரர்கள் வடக்கு தெரு நிர்வாகத்தை அணுகி அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடிய இந்த காரியம் தவறானது என்று எடுத்து சொல்லி வடக்குத் தெரு நிர்வாக தலைவர் அதை பெறுமனதோடு ஏற்று இந்த அனாச்சாரங்களை நடத்தக்கூடாது என்று கண்டிப்பான முறையில் உத்தரவிட்டார்இந்த உத்தரவை மீறி தொண்டி கிழக்கு பகுதியில் இருந்து வழக்கமாக சந்தன குடம் எடுக்கக்கூடிய ஒரு குடும்பம் சந்தன குடம் எடுத்து வரும் செய்தி அறிந்து கொள்கை சகோதரர்கள் பெருந்திரளாக கூடியதில் மழுங்கு சாகிபு தர்கா வளாகம் திணறியதுஇந்த நேரத்தில் தொண்டி ஆஸ்பத்திருக்கு அருகில் சந்தன குடத்தை பையில் வைத்து கொண்டு வரும் பொழுது அது தடுத்து நிறுத்தப்பட்டு சந்தனங்கள் கீழே கொட்டப்பட்டு மிக பெரிய அனாச்சாரம் தடுக்கப்பட்டதுவான வேடிக்கைகளும் கொள்கை சகோதர்களின் வீரியமிக்க உணர்வால் வான வேடிக்கை நடைபெறாமல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதுஇந் நேரத்தில் ஒரு சிறிய பதற்றம் நிலவினாலும் அந்த பதற்றத்தை கொள்கை சகோதர்களுக்கு சாதகமாக்கி ஏகத்துவ எழுச்சிக்கு வெற்றியாக்கி தர்கா வணங்கிகளான இணை வைப்பவர்களுக்கு முகத்தில் கறியை பூசிதொண்டியினுடைய மற்ற பகுதியிலுள்ள தர்கா வணங்கிகளுக்கு உள்ளத்தில் அச்சம் ஏற்படும் வகையில் அமைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.



Monday 11 June 2012

ஜெ அரசின் பச்சை துரோகம்

1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை!, முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!



தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை
இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்.
ஆசிரியர்கள் பற்றிய விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?
இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.
பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.
இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday 10 June 2012

mobile video: எல்லா புகழும் இறைவனுக்கே

M.I சுலைமான்

தினத்தந்தியை புறக்கணிப்பீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக தினத்தந்தியை வாங்காதீர், படிக்காதீர் என தொண்டியில் உள்ள அனைத்து தெரு தவ்ஹீத் ஜமாஅத் பலகைகளிலும் விழிப்புணர்வு செய்திகள் எழுதப்பட்டுள்ளது.

Saturday 9 June 2012

தொண்டியில் ஊர்வலம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்... 
தர்கா வழிபாட்டை எதிர்த்து தொண்டியில் நடைபெற்ற ஊர்வலம் 

அல்லாஹுடைய மாபெரும் கிருபையில் ஏகத்துவப் பிரச்சாரம் தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக வரலாற்றில் முதன் முறையாக தொண்டியில் தர்கா வழிபாட்டை கண்டித்து ஒரு பேரணி நடைபெற்றது. கடந்த 01.06.12 அன்று வெள்ளிகிழமை அசர் தொழுகைக்கு பிறகு நெ.கா.சுலைஹா மஹாலில் இருந்து பேரணி புறப்பட்டது . பேரணியில்
"பன்றியின் இறைச்சியும், கந்தூரி சோறும் ஹராம்தான் ",
"உலமா சபையே கந்தூரி விழாவை கண்டிக்காதது ஏன்",
"இணை வைத்தலுக்கு துணை போகும் ஆலிம்களே இது நியாயம் தானா",
"இறை கட்டளையை மீறி துறவறம் போன மழுங்கு அப்பா அவ்லியா இல்லை "
என்று முழங்கிய  கோசங்களை கேட்ட தர்கா வணங்கிகள் பலரை கலங்க வைத்தது போலி இமாம்களை ஓடி ஒளிய வைத்தது ஊர்வலத்தின் போது எதிர் வரும் ஒவ்வொரு தர்கா வழிபாட்டு தளத்திலும் சிறுமிகள் ஆற்றிய உரை பழமை வாதிகள் பலரை தலை குனிய வைத்தது. இதற்கு தொண்டி கிளை தலைவர் சிராஜுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இறுதியாக ஏழு மணிக்கு பாவோடியில் மவ்லவி யாசிர் அரபாத் அவர்கள் ஆற்றிய கண்டன உரையில் பன்றி இறைச்சிக்கு சமமான கந்தூரி சோறும் ஹராம்தான் என்பதை அழுத்தமாக கூறினார்.