Thursday 19 July 2012

பரிசளிப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 13.07.12 அன்று பள்ளியில் ஓதக்  கூடிய மாணவ, மாணவிகளுக்கு துஆக்கள், ஹதீஸ்கள், குர்ஆன் சம்மந்தமான ஒப்புவிக்கின்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பரிட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கும்  50க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.



இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.07.12 அன்று மச்சூரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்களும், பெண்களும் இஸ்லாம் சம்மந்தமாக கேட்ட சந்தேகங்களுக்கு சகோ யாசிர் அரபாத் அவர்கள் பதிலளித்தார்.

தெருமுனை பிரச்சாரம்

15/07/12 ஞாயறு மஹ்ரிபுக்குப் பின் உண்மை தப்லீக் ஜமாஅத் யார்? என்ற தலைப்பில் தப்லிக் தாலிம், பெரியார்களைப் பின்பற்றி வருவது போன்ற  தப்லீக் ஜமாஅத்தின் வண்டவாளங்களை தோலுரித்துக் காட்டினர் சகோ யாசிர் அரபாத் அவர்கள். தொண்டி  பாவோடியில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

Friday 13 July 2012

தாவா பணி

தொண்டி கிளை சார்பாக டெங்கு காய்ச்சலுக்கு மருந்து ஊற்ற வந்த சுகாதார துறை அதிகாரிகளுக்கு இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கப்பட்டது.

சமுதாயப்பணி

தொண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப  சுகாதார நிலையமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளையும் இணைந்து டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வண்ணமாக வீடு வீடாக சென்று கிணறுகளுக்கு மருந்து ஊற்றப்பட்டது.

கல்வி உதவி

தொண்டி கிளை சார்பாக ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

தாவா பணி

தொண்டி கிளை சார்பாக அடிக்கப்பட்ட ஏசு அழைக்கிறார் போஸ்டரை பார்த்துவிட்டு வந்த தொண்டியை சேர்ந்த ஆசிரியர் ரெக்ஸ் என்பவருக்கு இஸ்லாமிய மார்க்க விளக்கப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Thursday 12 July 2012

(கிராம தாவா) தெருமுனை பிரச்சாரம் & கேள்வி பதில்

தொண்டி கிளை சார்பாக 08/07/12 மக்ரிபுக்கு பின் மச்சூரில் மறுமை வெற்றிக்கு என்ன வலி? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சகோதரிகள் கேள்வியும் கேட்டனர். சகோ யாசிர் அரபாத் பதிலளித்தார்.

புதிய மர்கஸில் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டிகிளை சார்பாக 10/07/12 அன்று புதிய மர்கஸில் இளமையிலேயே இபாதத் என்ற தலைப்பில் இஷா தொழுகைக்குப் பின் யாசிர் அரபாத் உரை நிகழ்த்தினார்கள்.

மர்கஸில் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12/07/12 அன்று புதிய மர்கஸில் இறை சந்திப்பு என்ற தலைப்பில் இஷா தொழுகைக்குப் பின் சகோதரர் யாசிர் அரபாத் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday 8 July 2012

புதிய மர்கஸ் திறப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொண்டி கிளையின் புதிய  மர்கஸ் கடந்த அல்லாஹ்வுடைய
பேரருளால் 06.07.12 வெள்ளி அன்று சுப்ஹு தொழுகை முதல் ஆரம்பமானது (அல்ஹம்துலில்லாஹ்)

அன்றைய ஜும்ஆ உரையை TNTJ மாநில தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.அவர்கள் தன்னுடைய உரையில் கொள்கை  சகோதரர்கள் அனைவருக்கும் அழகிய அறிவுரைகளை அவர்களுக்கே உள்ள பானியில் வழங்கினார்கள். ஆனவம் வந்துவிடக்கூடாது, வீரியம் குறைந்து விடக்கூடாது, சமரசம் செய்துகொள்ளக்கூடாது ஆகிய மூன்று கோணங்களில் விளக்கினார்கள். ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.
அன்று மாலை ஏழு மணியளவில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (கேள்வி&பதில்) நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மொத்தம் 14 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஒன்றிரண்டு கேள்விகளை தவிர மற்ற அனைத்து கேள்விகளும் புதியதாகவே இருந்தன. அனைத்து கேள்விகளுக்கும் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.