Sunday 17 March 2013

வழிகாட்டி - பிப்ரவரி 2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக வழிகாட்டி என்ற இஸ்லாமிய மாத இதழ் இலவசமாக 2000 காப்பிகள் வீடுவீடாக சென்று கடந்த 2012 ஜனவரி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நூல் மார்க்கம், அறிவியல், மருத்துவம், கல்வி, கேள்வி & பதில் என்று பல்சுவையாக வெளிவருகிறது. சில சமயங்களில் வேளைப்பலுவின் காரணமாக ஒருசில மாதங்கள் வெளிவராமலும் இருந்திருக்கின்றது. அது போன்ற நேரங்களில் பொதுமக்களில்  பலர்  வழிகாட்டி இதழ் ஏன் வெளிவரவில்லை? என்ற ஆதங்கத்துடன் கேட்கின்றனர். எனவே இதை பார்க்க கூடிய சகோதரர்கள் தங்களால் இயன்றஅளவு பொருளாதார உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதற்கான செலவு ரூ.12000/- வரை ஆகிறது. இதை விளம்பரதாரர்களை கொண்டே சரிசெய்யப்படுகிறது. சில சமயங்களில் பற்றாக்குறை நிலையும் ஏற்பாடுகிறது. அதை கிளையின் சார்பாகவே சரி செய்யப்பட்டுவருகிறது.

(2013 பிப்ரவரி வழிகாட்டி இதழ் நமது இணையதளத்தின் வலதுபுறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment