Thursday, 27 September 2012
Monday, 17 September 2012
Wednesday, 12 September 2012
பெண்கள் பயான்
தொண்டி கிளை சார்பாக 7.9.2012 வெள்ளிக் கிழமை அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஓடாவி தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது. இந்த பயானில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ற தலைப்பில்
யாசீர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.Wednesday, 5 September 2012
மச்சூரில் புதிய கிளை ஆரம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அருகில் இருக்கும் மச்சூர் என்ற கிராமத்தில் 04.09.2012 செவ்வாய் கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக தெருமுனை பிரச்சாரமும், பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடந்தது. TNTJ யின் பணிகள் என்ற தலைப்பில் தொண்டி கிளை தலைவர் கலிபுல்லா அவர்களும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மவ்லவி யாசிர் அரபாத் அவர்களும் பதிலளித்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயலாளர் சிராஜுதீன் அவர்கள் தலைமையில் மச்சூர் கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Monday, 3 September 2012
R. புதுப்பட்டினம் கிளை தெருமுனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் R. புதுப்பட்டினம் கிளையில் 03.09.12 ஞாயிறு அன்று சகோ. M.A. பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொருக்காத சுன்னத் ஜமாத்தினர் இக்கூட்டத்தை நிருத்த பெரும் பாடுபட்டு தாசில்தாரையும், D.S.P. யையும் சந்தித்துள்ளனர். பின்பு அந்த கூட்டம் நடந்த கூடாது என்று காவல் துறையால் தடை செய்யப்பட்டது. பின்பு அதே தேதியில் ஆர்ப்பாட்டம் என்று R. புதுப்பட்டினம் அறிவித்தது. பின்பு காவல் துறையே இதை தெருமுனை கூட்டமாக நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி தரப்பட்டது. இந்த தெருமுனை கூட்டத்தில் சகோ. அல்தாபி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டதிற்க்கு தொண்டியிலிருந்து ஏழு சுமோவில் சென்று கலந்து கொண்டோம்.
பேச்சாளர் பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மாவட்ட அளவில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 27 மாணவர்கள் மாவட்ட அளவில் கலந்துகொண்டனர். தலைமையிலிருந்து இரண்டு பேச்சாளர்கள் பயிற்சி அழித்தனர். இந்த பயிற்சி முகாம் 01.09.12 மற்றும் 02.09.12 (சனி, ஞாயறு) ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இரண்டாவது நாளாக மாநில தலைவர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அழைப்பு பணியில் அவசியம் என்பதை ஆழமாக உணர்த்தினார்கள்.
Subscribe to:
Posts (Atom)