Sunday, 11 August 2013
இரவுத்தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவதும் தொண்டி மர்கஸில் இரவுத்தொழுகை நடத்தபட்டது. அதை தொடர்ந்து நபிமார்களின் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இதில் தினமும் ஆண்களும், பெண்களும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கேள்வி & பதில் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் மாதத்தின் இறுதி பத்தின் ஒற்றைப்படை இரவுகளில் இரவு தொழுகைக்குப் பிறகு கேள்வி & பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சரியான பதிலை தரும் சகோதர, சகோதரிகளுக்கு உடனடியாக பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பு கேள்விகளுக்கு பதிலளிக்கும் நபர்களுக்கு புஹாரி ஹதீஸ் நூல் பரிசாக வழங்கப்பட்டது.
Saturday, 10 August 2013
Saturday, 20 July 2013
Monday, 8 July 2013
ரமலான் சிறப்பு கருத்தரங்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.07.13 அன்று தொண்டி தவ்ஹீத் மர்கசில் ரமலான் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்களும், நரகில் இருந்து காக்கும் நபிவழி என்ற தலைப்பில் சகோதரர் ராஜ் முஹம்மது அவர்களும் உரையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Subscribe to:
Posts (Atom)














