Monday, 27 August 2012

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.08.12 திங்கள்கிழமை  அன்று மாலை மஹ்ரிபு தொழுகைக்குக்குப் பின் தெருமுனை பிரச்சாரம் தொண்டி பாவோடி மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த 21.08.12 அன்று தொண்டி த.மு.மு.க.வினர் தெருமுனைக் கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றியும், உணர்வு பத்திரிக்கை பற்றியும், P.J. அவர்களை பற்றியும் தவறாக விமர்சித்தனர். அவர்களுக்கு பதில் கொடுப்பதற்காக தெருமுனை பிரச்சாரத்தில் சகோ.யாசிர் அரபாத் அவர்கள்,
  • சுனாமிக்கு செய்ததை மக்களுக்கு முறையாக கணக்கு காட்டாதது.
  • இள.கணேசனுடன் கைகோர்த்தது,மரண தண்டனையை தடை செய்யக்கோரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றியது.
  • சுனாமிக்காக வசூல் செய்த தொகையை வைத்து த.மு.மு.க.விற்காக சொந்த இடம் வாங்கி பேரிடர் மையம் கட்டியது
போன்ற த.மு.மு.க.வின் சமூக துரோகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அடுத்தபடியாக தொண்டி கிளை தலைவர் E.R.A. கலிபுல்லா அவர்கள் தொண்டி த.மு.மு.க. நிர்வாகிகளின் வண்டவாளங்களை தோலுரித்து காட்டினர். இக்கூட்டம் 7 மணிக்கு ஆரம்பித்து 8.30 வரை ஏராளமான மக்கள் கலந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது.






Sunday, 26 August 2012

முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது சம்மந்தமாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தி

தொண்டியில் பல ஆண்டுகளாக பாலாஜி கேஸ் நிறுவனம் செய்து வரும் முறைகேட்டை கண்டித்து தொண்டிக்கு வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களை முற்றுகை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட காவல் துறை ஆய்வாளர் மற்றும் உளவுத் துறையினர் ஆகியோர் முன்னிலையில், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் TNTJ நிர்வாகிகளுக்கும், பாலாஜி கேஸ் நிறுவனத்தாருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இது சம்மந்தமாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தி.


அமைதி பேச்சுவார்த்தை

தொண்டியில் பல ஆண்டுகளாக பாலாஜி கேஸ் நிறுவனம் செய்து வரும் முறைகேட்டை கண்டித்து தொண்டிக்கு வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களை முற்றுகை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட காவல் துறை ஆய்வாளர் மற்றும் உளவுத் துறையினர் ஆகியோர் முன்னிலையில், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் TNTJ நிர்வாகிகளுக்கும்பாலாஜி கேஸ் நிறுவனத்தாருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. 
  1. கேஸ் சிலிண்டர் முறையாக வீடுவீடாக சென்று வழங்கவேண்டும்.
  2. தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான பதிலை சொல்லி பதிவு செய்ய வேண்டும்.
  3. வரும் வாடிக்கையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
  4. பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்களை பதிவு செய்த நாளிலிருந்து 20 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தாமதம் ஏற்படின் தகவல் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவலை தெரிவிக்க வேண்டும்.
  5. சிலிண்டர்களை சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்ககூடாது.
இருதரப்பினரும் கையெழுத்திட்ட நகல் 





Friday, 24 August 2012

மத்திய நிதி அமைச்சரை முற்றுகை

தொண்டியில் பல ஆண்டுகளாக பாலாஜி கேஸ் நிறுவனம் செய்து வரும் முறைகேட்டை கண்டித்து தொண்டிக்கு வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களை முற்றுகை.

Wednesday, 22 August 2012

புதிய தலைவர் தேர்வு

தொண்டியில் 21.08.12 அன்று நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுவில் மாவட்ட செயலாளராக தொண்டி கிளை தலைவர் சகோ.சிராஜுதீன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். தொண்டி கிளைக்கு புதிய தலைவராக முன்னால் தலைவர் சகோ.கலிபுல்லா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

பெருநாள் பேட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக நோன்பு பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை முடிந்ததும் கேப்டன் டி.வி.க்கு மவ்லவி. யாசிர் மற்றும் முன்னால் தலைவர் சகோ. கலிபுல்லா அவர்களும் பெருநாள் செய்தி வழங்கினார்கள்.


தொண்டி பேரூராட்சி தலைவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் விருது

தொண்டி பேரூராட்சியின் வளர்ச்சிப் பணியில் சிறப்பாக பணியாற்றியதால்  தொண்டி பேரூராட்சி தலைவர் எம்.எஸ். சேகு நெய்னா அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் விருதும், பாராட்டுச் சான்றிதழும்  மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்பட்டது.


நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. சகோ. பி.ஜைனுல் ஆபிதீன்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



Monday, 20 August 2012

மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு விளம்பர பேனர்

ரமலான் மாதம் ஒலிபரப்பு செய்யப்பட்ட மனக்குழப்பத்திற்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு என்று டி.வி நிகழ்ச்சியை பார்க்க சொன்ன விளம்பர பேனர் ஆட்டோக்களிலும் கடைகளிலும் ஒட்டப்பட்டது.


நபிவழியில் திடல் தொழுகை விளம்பர போஸ்டர்

தொண்டியில் நடந்த பெருநாள் திடல் நபிவழியில் திடல் தொழுகை விளம்பர போஸ்டர்.


விரைவில் முற்றுகை போராட்டம் இன்ஷா அல்லாஹ்


தொண்டியில் பாலாஜி கேஸ் விநியோக முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பதை விளக்கும் பேனர்.


தாவாப்பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக புகை பிடித்தால் மிகப் பெரிய கேடுதான் என்பதை உணர்த்தும் பேனர் வைக்கப்பட்டது.


இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலான் 30ம்  நோன்பு இரவு தொழுகைக்கு பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ( முஸ்லிம்களுக்கான கேள்வி & பதில் ) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.


Saturday, 18 August 2012

பித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18-07-2012 அன்று சுமார் 400கும் அதிகமான ஏழை குடும்பங்களில் உள்ள  ஒவ்வொருவருக்கும் தலா 370 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருள்கள்(பித்ரா) விநியோகம் செய்யப்பட்டது.




பாலாஜி கேஸ் ஏஜென்சி விநியோக முறைகேடு

பாலாஜி கேஸ் ஏஜென்சி விநியோக முறைகேடு தலைவிரித்தாடுகிறது. இதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக தொடர் முற்றுகை போராட்டம் என தொண்டி கிளைக்கு சொந்தமான கரும்பலகைகளில் எழுதப்பட்டது.
                                     

இதைக்கண்ட அரசு அதிகாரிகலான வருவாய் துறை அதிகாரி ( R.I ), கிராம நிர்வாக அதிகாரி (V.A.O. ), வட்டவலங்கள் அதிகாரி ( T.S.O.) ஆகியோர் தகவல் தெரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை நிர்வாகத்தை அழைத்தனர்.

அதிகாரிகளிடத்தில் வைக்கப்பட்ட குறைகள் 
  • தொண்டி கேஸ் ஏஜென்சியில் கேஸ் பெற்ற ஒரு மாதம் கழித்து மறு சிலிண்டருக்காக பதியப்படுகிறது.
  • அதன்பின் ஒரு மாதம் அல்லது 40 நாட்கள் கழித்துதான் புதிய சிலிண்டர் தரப்படுகிறது.
  • டோர் டேலிவரிக்கான பணத்தை சேர்த்து வாங்கிக்கொண்டு தெருவில் எங்காவது ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்திக்கொண்டு பெண்களையும், பெரியவர்களையும், சிறுவர்களையும் காலி சிலிண்டர்களை எடுத்துவரச் சொல்லி அலைகளிகின்றன.
  • கேஸ் கம்பெனி சம்மந்தமான விபரங்கள் கேட்க அலுவலகம் சென்றால் அங்குள்ள ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பொருப்பின்றி பதிலளிக்கின்றன.
இதை கேட்ட அதிகாரிகள் அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க கால அவகாசம் கேட்டுள்ளனர்.
மேலும் அதை எழுத்துப்பூர்வமாக தமிழக முதல்வருக்கும், மத்திய எரிபொருள் அமைச்சருக்கும் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.

ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலானில் ஒற்றைப்படை இரவுகளில் மவ்லவி யாசிர் அரபாத் அவர்களால் தொழுகைப் பயிற்சி, கேள்வி & பதில் நிகழ்ச்சி, வினாடி வினா (பரிசளிப்பு) நிகழ்த்தப்பட்டது.


சாலையின் குறுக்கே BARRI GAURD

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக தொண்டி  E.C.R. மெயின் ரோட்டில் அதிக விபத்து நடந்துவந்தது. அதை தடுக்கும் விதமாக சாலையின் குறுக்கே BARRI GAURD நெடுஞ்சாலை துறை, தொண்டி காவல் துறை ஆகியவற்றின் அனுமதியோடு தடுப்பு வைக்கப்பட்டது. அந்த தடுப்பு மீண்டும் ரூ. 5000/- செலவில் புதுப்பிக்கப்பட்டது.


ஏழைகளுக்கு உணவு பொருட்கள் உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக நோன்பு பிடிக்கமுடியாத  நோயாளிகளுக்கு பரிகாரமாக, ஏழைகளுக்கு உணவு வழங்கக்கூடிய தொகையை வசூல் செய்து நான்கு ஏழைகளுக்கு தலா 1000/- ரூபாய் மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ரமலானில் இரவு தொழுகைக்குப்பின் நபித்தோழர், தோழியர் வரலாறு என்ற தலைப்பில் சகோ. யாசிர் அரபாத் அவர்கள் தொடர் பயான் நிகழ்த்தினார்கள்.



இப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக  கட்டப்பட்டுள்ள புதிய மர்கஸில் இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 150 நபர்கள் (நோன்பாளிகள்) நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.