பாலாஜி கேஸ் ஏஜென்சி விநியோக முறைகேடு தலைவிரித்தாடுகிறது. இதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக தொடர் முற்றுகை போராட்டம் என தொண்டி கிளைக்கு சொந்தமான கரும்பலகைகளில் எழுதப்பட்டது.
இதைக்கண்ட அரசு அதிகாரிகலான வருவாய் துறை அதிகாரி ( R.I ), கிராம நிர்வாக அதிகாரி (V.A.O. ), வட்டவலங்கள் அதிகாரி ( T.S.O.) ஆகியோர் தகவல் தெரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை நிர்வாகத்தை அழைத்தனர்.
அதிகாரிகளிடத்தில் வைக்கப்பட்ட குறைகள்
- தொண்டி கேஸ் ஏஜென்சியில் கேஸ் பெற்ற ஒரு மாதம் கழித்து மறு சிலிண்டருக்காக பதியப்படுகிறது.
- அதன்பின் ஒரு மாதம் அல்லது 40 நாட்கள் கழித்துதான் புதிய சிலிண்டர் தரப்படுகிறது.
- டோர் டேலிவரிக்கான பணத்தை சேர்த்து வாங்கிக்கொண்டு தெருவில் எங்காவது ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்திக்கொண்டு பெண்களையும், பெரியவர்களையும், சிறுவர்களையும் காலி சிலிண்டர்களை எடுத்துவரச் சொல்லி அலைகளிகின்றன.
- கேஸ் கம்பெனி சம்மந்தமான விபரங்கள் கேட்க அலுவலகம் சென்றால் அங்குள்ள ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பொருப்பின்றி பதிலளிக்கின்றன.
இதை கேட்ட அதிகாரிகள் அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்க கால அவகாசம் கேட்டுள்ளனர்.
மேலும் அதை எழுத்துப்பூர்வமாக தமிழக முதல்வருக்கும், மத்திய எரிபொருள் அமைச்சருக்கும் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment