Sunday 26 August 2012

அமைதி பேச்சுவார்த்தை

தொண்டியில் பல ஆண்டுகளாக பாலாஜி கேஸ் நிறுவனம் செய்து வரும் முறைகேட்டை கண்டித்து தொண்டிக்கு வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களை முற்றுகை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட காவல் துறை ஆய்வாளர் மற்றும் உளவுத் துறையினர் ஆகியோர் முன்னிலையில், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் TNTJ நிர்வாகிகளுக்கும்பாலாஜி கேஸ் நிறுவனத்தாருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. 
  1. கேஸ் சிலிண்டர் முறையாக வீடுவீடாக சென்று வழங்கவேண்டும்.
  2. தொலைபேசி மூலமாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கம்பெனியில் பணிபுரியும் ஊழியர்கள் சரியான பதிலை சொல்லி பதிவு செய்ய வேண்டும்.
  3. வரும் வாடிக்கையாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
  4. பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்களை பதிவு செய்த நாளிலிருந்து 20 நாட்களுக்குள் வழங்கவேண்டும். தாமதம் ஏற்படின் தகவல் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவலை தெரிவிக்க வேண்டும்.
  5. சிலிண்டர்களை சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்ககூடாது.
இருதரப்பினரும் கையெழுத்திட்ட நகல் 





No comments:

Post a Comment