தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.10.12 சனிக்கிழமை
இஷாவுக்கு பின் தனிநபர் சந்திப்பில் தொண்டியில் ஒரு சுன்னத் ஜமாஅத்
பள்ளியின் முஅத்தீன்(பிலால்) மவ்லிது, தட்டு, தகடு, தாயத்து, தர்ஹா வழிபாடு
ஆகியவற்றை செய்யக்கூடியவராக இருந்ததால் அந்த சகோதரரை நம்முடைய இடத்திற்கு
வரவழைத்து அவருக்கு இஸ்லாமிய அடிப்படை கொள்கை பற்றி விளக்கப்பட்டது. மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் பற்றியும், தர்ஹா வழிபாடு ஓர் இணைப்பு
என்பதையும் விளக்கப்பட்டது. அவரும் நம்மிடையே கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு பதில் கொடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த கலந்துரையாடல்
நடந்தது. இறுதியில் இஸ்லாமிய அடிப்படை கொள்கை, தர்ஹா வழிபாடு, ஏகத்துவமும் இணைவைப்பும் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment