Thursday 29 November 2012

துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஆஷுரா நோன்பும், நன்மையும் என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் தொண்டி, எம்.ஆர். பட்டிணம் ஆகிய ஊர்களில் விநியோகிக்கப்பட்டது.


சிறு தொழில் உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.11.12 அன்று தொண்டி தெற்கு தெருவை சேர்ந்த சகோதரர் இஸ்மாயில் என்பவருக்கு சிறு தொழில் உதவியாக ரூ. 4000/- வழங்கப்பட்டது.

Wednesday 28 November 2012

தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.11.12 ஞாயிற்றுக்கிழமை தொண்டி மர்கஸில் வைத்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட எம்.ஆர். பட்டிணம் கிளை நிர்வாகிகளுக்கு காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை தர்பியா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொழுகை பயிற்சி, நல்லொழுக்க முறை, நிர்வாகிகள் நடந்து கொள்ளும் முறை ஆகியவைகளை சகோதரர் எம். யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் பயிற்சி அழித்தார்கள்.

தனி நபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.11.12 அன்று தனி நபர் தாவாவில் புரோட்டா மாஸ்டர் கையில் கட்டப்பட்டிருந்த தாயத்தின் விளைவை எடுத்துரைத்து தாயத்து அவர் கையாலேயே எடுக்கப்பட்டது.

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.11.12 வெள்ளிக்கிழமை M.G.R. நகரில் அஸருக்கு கிப்ட் ஏகத்துவம் இணைவைப்பும் என்ற தலைப்பில் சகோதரர் சித்தீக் உரைநிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மஹ்ரிபுக்கு பின் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி எம். ஆசிப் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Tuesday 27 November 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.11.12 வியாழக்கிழமை அஸருக்கு பின் ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி அப்துர் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
மஹ்ரிபுக்கு பின் வட்டி ஓர் நரகப் படுகுழி என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

உணர்வு, ஏகத்துவம், தீன்குல பெண்மணி பற்றி விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக சைக்கிளில் உணர்வு, ஏகத்துவம், தீன்குல பெண்மணி பற்றி விளம்பரம் செய்யப்பட்டது.

தனி நபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.11.12 அன்று வீடுவீடாக தனி நபர் தாவா செய்யப்பட்டது. அப்போது கிழக்குத் தெருவில் உள்ள வீட்டின் ஓட்டு சட்டத்தில் எலும்பிச்சை கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. இது அல்லாஹ்விற்கு இணைவைக்கும் செயல் என்பதை அந்த வீட்டு சகோதரியிடம் விளக்கப்பட்டு அதை அறுத்து எறியப்பட்டது.

Monday 26 November 2012

45 வருடங்களாகியும் திறக்கபடாமலேயே உள்ள பள்ளிவாசல்

தேவகோட்டை அருகில் உள்ள பெரியகாரை என்ற ஊரில்தான் நீங்கள் பார்க்கும் இந்த பாழடைந்த பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டு சுமார் 45 வருடங்களாகியும் திறக்கபடாமலேயே உள்ளது. ஆனால் என்ன கூத்து என்றால்! இந்த பள்ளிக்கு அருகில் உள்ள தர்ஹாமட்டும் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. என்ன அவ்லியா பக்தி!!!

தீன்குல பெண்மணி மாத இதழ் இலவசமாக வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.11.12 நவம்பர் மாத தீன்குல பெண்மணி மாத இதழ் 250 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வரக்கூடிய மாதத்திற்கு சந்தா பிடிக்கப்பட்டது.

Monday 12 November 2012

மாற்று மதத்தவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சகோதரர் சிராஜுதீன் அவர்கள் 12.11.12 அன்று கீழக்கரை காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும், கீழக்கரை மகளீர் காவல் துறை துணை ஆய்வாளர் அவர்களுக்கும், திருப்பாலைக்குடி காவல் துறை ஆய்வாளர் அவர்களுக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் நூல்கள் வழங்கினார்.

Sunday 11 November 2012

M.R. பட்டிணத்தில் புதிய கிளை ஆரம்பம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 11.11.12 ஞாயிறு மாலை 5 மணி அளவில் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சகோதரர் சிராஜுதீன் அவர்கள் தலைமையில், மவ்லவி சகோதரர் யாசிர் அரபாத் முன்னிலையில் தொண்டிக்கு அருகாமையில் உள்ள M.R. பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டது.

தலைவர்                        :  J. பாஷித் அஹமது   8508070605
 
செயலாளர்                   :  K. செய்யது அபுதாஹிர்  9787120371
 
பொருளாளர்                :  N. சிராஜ் முஹமது (மவ்லவி - மன்பஈ)  9750526540
 
துணை தலைவர்       :  S. முஹமது ஹாஜி   8973767644
 
துணை செயலாளர்  :  M.  முஹமது சலீம்  9842753021
 

 

Saturday 10 November 2012

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 10.11.12 சனிக்கிழமை அசருக்குபின் தொண்டிக்கு அருகில் உள்ள சகோதரர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி என்ன? என்பது பற்றி உள்ளரங்கு நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது. அதற்கு பின் சகோதரர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டது.

ஜும்ஆ பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.11.12 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் புதுக்கோட்டை மாவட்ட பேச்சாளர் சகோதரர் மக்தூம் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


கிராமபுர தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.11.12 வெள்ளிக்கிழமை மஹ்ரிபு தொழுகைக்கு பின் தொண்டியிலிருந்து சுமார் 6 km தொலைவில் உள்ள வீரசங்கிலிமடம் என்ற கிராமத்தில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொண்டி சேர்ந்த சகோதரர்  M. ஆஷிப் அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையில் "நாம் அன்றாட வாழ்க்கையில் சர்வசாதாரணமாக ரெடிமேட் பொய்களை சொல்லி வருகிறோம். இந்த காரியம் நம்மை நரகத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும்" என்ற தொனியில் பேசினார்.
அடுத்தபாடியாக தொண்டி சேர்ந்த N. மஷாரிக் அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்த உரையில் "ஒரு மனிதனின் உயிர் பறிக்கப்படும் போது நல்லடியாராக இருந்தால் அவருக்கு சொர்க்கவாசி என்ற நற்ச்செய்தி கூறப்படும் என்றும், ஒருவர் தீய அடியாராக இருந்தால் கொருத்த முகமுடைய, கொடூரமான கண்களை உடைய வானவர்கள் உயிரை கைப்பற்றுவார்கள்" என்ற கருத்துப்பட நெஞ்சம் உருக உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து பெண்களும் ஆர்வமாக கேள்வி கேட்டனர். 




Thursday 8 November 2012

போலி உலமாவின் உளறல் பேச்சு

 தொண்டிக்கு அருகே உள்ள M.R. பட்டிணத்தை சேர்ந்த ஒரு கொள்கை சகோதரர் கடந்த 04.11.12 ஞாயிற்றுகிழமை அன்று நபிவழி திருமணம் நடைபெற முடிவு செய்திருந்தார். இதை தொண்டி TNTJ கிளைக்கு தெரியப்படுத்தி, TNTJ தொண்டி நிர்வாகம் M.R. பட்டிணம் சுன்னத் ஜமாஅத் தலைவரை நேரில் சந்தித்தது.

 சுமார் அரை மணி நேர பேச்சுவார்தைக்கு பின் நான் தனி ஆளில்லை, நிர்வாகத்தில் கலந்து சொல்கிறேன். என்றார். 03.11.12 அன்று அஸர் தொழுகைக்கு பின் M.R. பட்டிணம் சுன்னத் ஜமாஅத் ஊர்கூட்டம் என்ற பெயரில் ஆலோசனை நடத்தி தவ்ஹீத் ஜமாத்திற்கு இங்கு இடமில்லை. திருமணத்தை நாங்கள்தான் நடத்துவோம் என்று மாப்பிள்ளையின் தாயாரிடம் மிரட்டியதால், தாயார் கண்ணீருடன் மாப்பிள்ளையிடம் நபிவழி திருமணதிற்கு தடைவிதித்தார்.திருமண நிகழ்ச்சியில் அல் அஜ்ஹரியா அரபிக் கல்லூரி பேராசிரியர் புதுப்பட்டிணத்தை சேர்ந்த அஹ்மது ஜலாலுதீன் அவர்கள் உரை நிகழ்த்தும் போது திருமணங்களில் கலிமா சொல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தை விபச்சாரத்தில் பிறந்ததற்கு சமம் என்றும் என்போன்ற ஆலிம்களுக்கு கலிமா தேவை இல்லை என்றும் கொக்கரித்தார்.

   இதற்கு ஆதாரம் காட்டத் தயாரா என்று TNTJ தொண்டி கிளைக்கு சொந்தமான கரும்பலகையில் எழுதப்பட்டது.


பூரண நலமடைய அனைவரும் துஆ செய்வோம்

தொண்டி வடக்குதெரு சுன்னத் ஜமாஅத் மேலப்பள்ளிவசால் முஅத்தீன் அவர்களுக்கு நுரைஈரலில் சளி ஏற்பட்டதால் இரத்த வாந்தி எடுத்து மிகவும் இயலாத நிலையில் தேவகோட்டை தனியார் மருத்துவமனை I.C.U.வில் சேர்க்கப்பட்டார். அவர்களை தொண்டி கிளை 08.11.12 அன்று நேரில் சென்று ஆறுதல் கூறி தேவையான உதவி செய்தது. அவர் பூரண நலமடைய அனைவரும் துஆ செய்வோம்.

வரதட்சணை ஒழிப்பு பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.11.12 அன்று கிழக்குதெருவில் உள்ள பெரிய பள்ளிவாசல் எதிரில் வரதட்சணை ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு பேனர் 10x5 அளவில் வைக்கப்பட்டுள்ளது.

Tuesday 6 November 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.11.12 வியாழக்கிழமை மஹ்ரிபுக்கு பின் தொண்டி மர்கஸில் உண்மை தப்லீக் ஜமாஅத் யார்? என்ற தலைப்பில் சகோதரர் M. யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.

ஜும்ஆ பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.11.12 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானில் மறுமைக்கு அஞ்சுவோம் என்ற தலைப்பில் சகோதரர் செய்யது (தேவிப்பட்டினம்) அவர்கள் உரை நிகழ்த்தினார்.

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.11.12 வெள்ளிக்கிழமை அஸருக்கு பின் லெப்பை சாஹிபு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமணம் என்ற பெயரில் நடத்தப்படும் அனாச்சாரங்களை கண்டித்து சகோதரர் M. ஓயசுல் உரை நிகழ்த்தினார்.
அதை தொடர்ந்து மஹ்ரிபுக்கு பின் அந்த தெருவில் உலாவி வரும் குலப்பெருமையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதை சகோதரர் M. யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதற்கு பின் வீடுகளில் தபால் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.11.12 வியாழக்கிழமை அஸருக்கு பின் தொண்டி M.G.R. நகரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சகோதரர் M. ஓய்சுல் அவர்கள் இஸ்லாமும் இன்றைய இளைஞர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இந்த உரையில் "நமது சமுதாயத்தில் இளைஞர்கள் T.V., சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், கல்வி கற்க செல்கிறோம் என்ற பெயரில் அந்நிய ஆண்களிடம் ஓட்டம் எடுப்பது போன்ற தவறான காரியங்களை பட்டியலிட்டதோடு பெற்றோர்கள் இதை கண்காணிக்க வேண்டும். இல்லையேல் உலகத்தில் கெடுவதோடு மறுமையிலும் கைசேதம்தான்" என ஒரு மணி நேரம் உரை நிகழ்த்தினார்.