Wednesday, 30 January 2013
அழைப்பு பணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.01.13 திங்கள் அன்று தொண்டி மர்கஸில் வைத்து திருவாரூர் அட்வகேட் ராஜகோபால் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர், மனிதனுக்கேற்ற மார்க்கம், திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள், அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய நூல்களும், இஸ்லாம் தீவரவாதத்தை தூண்டுகிறதா என்ற துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. தர்ஹா வழிபாடு குறித்து அவர் எழுப்பிய கேள்விகளுக்கு மவ்லவி எம்.யாசிர் அரபாத் இம்தாதி, மவ்லவி சுலைமான் பாகவி, தொண்டி கிளை பொருளாளர் மத்தின் ஆகியோர் பதிலளித்தனர்.
அழைப்பு பணி
24.01.13 அன்று தொண்டிக்கு அருகில் உள்ள தினையத்தூரை சேர்ந்த சண்முகம் என்பவர் தொண்டி கிளை மர்கசில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயர் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்று அவரின் இல்லத்திற்கு சென்று அவர் மனைவிக்கு இஸ்லாத்தின் கொள்கை பற்றி விளக்கி திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர், வருமுன் உரைத்த இஸ்லாம் போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பெண்களுக்கான குடும்ப நல வழிகாட்டுதல் பயிற்சி முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.01.13 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெண்களுக்கான குடும்ப நல வழிகாட்டுதல் பயிற்சி முகாம் தொண்டி நெ.கா. சுலைஹா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் முன்னுரை வழங்கினார்.
இதில் நபிவழியில் தொழுகை என்ற தலைப்பில் சகோதரி ஆயிஷா ஆலிமா அவர்கள் செய்முறையோடு விளக்கினார்கள்.
ஜனாஸாவின் சட்டதிட்டங்களும், ஜனாஸா குளிப்பாட்டும் முறையும் சகோதரி சர்மிளா ஆலிமா அவர்கள் செய்முறையுடன் விளக்கினார்.
குடும்ப நல வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
நாவை பேணுவோம் என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பர்தா அணியும் முறை பற்றி சகோதரி சமீமா ஆலிமா உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக மகளிர் தாவா குழு அமைக்கப்பட்டது. 18 சகோதரிகள் தாவா குழுவிற்கு பெயர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆலிமாக்களை வைத்து வாரம் ஒரு முறை பயிற்சி வகுப்புகள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் 155 பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
Tuesday, 22 January 2013
Saturday, 19 January 2013
வழிகாட்டி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக வழிகாட்டி என்ற இஸ்லாமிய மாத இதழ் இலவசமாக 2000 காப்பிகள் வீடுவீடாக சென்று கடந்த 2012 ஜனவரி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நூல் மார்க்கம், அறிவியல், மருத்துவம், கல்வி, கேள்வி & பதில் என்று பல்சுவையாக வெளிவருகிறது. சில சமயங்களில் வேளைப்பலுவின் காரணமாக ஒருசில மாதங்கள் வெளிவராமலும் இருந்திருக்கின்றது. அது போன்ற நேரங்களில் பொதுமக்களில் பலர் வழிகாட்டி இதழ் ஏன் வெளிவரவில்லை? என்ற ஆதங்கத்துடன் கேட்கின்றனர். எனவே இதை பார்க்க கூடிய சகோதரர்கள் தங்களால் இயன்றஅளவு பொருளாதார உதவியை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதற்கான செலவு ரூ.12000/- வரை ஆகிறது. இதை விளம்பரதாரர்களை கொண்டே சரிசெய்யப்படுகிறது. சில சமயங்களில் பற்றாக்குறை நிலையும் ஏற்பாடுகிறது. அதை கிளையின் சார்பாகவே சரி செய்யப்பட்டுவருகிறது.
(2013 ஜனவரி வழிகாட்டி இதழ் நமது இணையதளத்தின் வலதுபுறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.)
(2013 ஜனவரி வழிகாட்டி இதழ் நமது இணையதளத்தின் வலதுபுறத்தில் வெளியிடப்பட்டுள்ளது.)
Wednesday, 16 January 2013
Monday, 14 January 2013
Sunday, 13 January 2013
தாவா பணி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 13.01.13 அன்று அசருக்கு பின் தொண்டி மலுங்கு ஒலியுல்லா தர்காவில் மலுங்கு ஒலியுல்லா நோய் நிவாரணம் தருவார் என்ற நம்பிக்கையில் அங்கு தங்கியிருந்த தாய்மார்களுக்கு நோய் நிவாரணம் தருவதும், முசிபத் போக்குவதும் அல்லா ஒருவன் மட்டும்தான் என்ற அந்த தாய்மார்களுக்கு உணர்த்தப்பட்டது.
Saturday, 12 January 2013
Thursday, 10 January 2013
பயான் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.01.13 வெள்ளிக்கிழமை அஸருக்கு பின் லெப்பை சாஹிபு தெருவில் மறுமை நம்பிக்கை ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி மஷாரிக் அவர்களும், இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள் என்ற தலைப்பில் தர்ஹா வழிபாடு, கத்தம், பாத்திஹா, வரதட்சணை, அனாச்சாரமான திருமணம் போன்றவைகளை கண்டித்து சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
Thursday, 3 January 2013
பயான் நிகழ்ச்சி
ஜனவரி மூன்றாம் தேதி மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு தெற்கு தெருவில் உள்ள புது பள்ளிவாசலுக்கு அருகில் வழிகெடுக்கும் உலமாக்கள் என்ற தலைப்பில் மவ்லவி எம்.யாசிர் அரபாத் அவர்கள் உரையாற்றினார்கள். இந்த உரையில் உலமாக்கள் சத்தியத்தை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சொல்வதில்லை. திருமணம் என்ற பெயரில் நூதன அனாச்சாரங்கள், கத்தம் பாத்திஹா என்றே உலமாக்கள் உள்ளனர், என்ற கருத்துப்பட பேசினார். அதை தொடர்ந்து ஆஸிப் அவர்கள் சின்னத்திரையில் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
மனதார பாராட்டுகிறோம்
சென்ற வாரம் நம்புதாளை மேலத்தெருவில் ஜும்மா பயானில் புதுப்ட்டினத்தை சேர்ந்த சகோதரர் ஜலால் ஆலிம் அவர்கள் கோட்டைபட்டினத்தில் நடக்கும் கந்தூரி விழாவிற்கு செல்லக்கூடாது என்றும் ஏனெனில் அது அல்லாஹ்வின் சாபம் இறங்கும் இடம் என்றும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்ற கருத்து பட பேசினார். இது போன்று அனைத்து உலமாக்களும் மக்களுக்கு சத்தியத்தை சொல்ல வேண்டும் என்றும் மனதார பாராட்டுகிறோம் என்றும் பாவோடியில் உள்ள நமது தகவல் பலகையில் எழுதப்பட்டது.
Wednesday, 2 January 2013
Subscribe to:
Posts (Atom)