Wednesday 30 January 2013

பெண்களுக்கான குடும்ப நல வழிகாட்டுதல் பயிற்சி முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.01.13 அன்று காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை பெண்களுக்கான குடும்ப நல வழிகாட்டுதல் பயிற்சி முகாம் தொண்டி நெ.கா. சுலைஹா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் முன்னுரை வழங்கினார்.
இதில் நபிவழியில் தொழுகை என்ற தலைப்பில் சகோதரி ஆயிஷா ஆலிமா அவர்கள் செய்முறையோடு விளக்கினார்கள்.
ஜனாஸாவின் சட்டதிட்டங்களும், ஜனாஸா குளிப்பாட்டும் முறையும் சகோதரி சர்மிளா ஆலிமா அவர்கள்   செய்முறையுடன் விளக்கினார்.
குடும்ப நல வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சகோதரர் எம்.ஐ.சுலைமான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
நாவை பேணுவோம் என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பர்தா அணியும் முறை பற்றி சகோதரி சமீமா ஆலிமா உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக மகளிர் தாவா குழு அமைக்கப்பட்டது. 18 சகோதரிகள் தாவா குழுவிற்கு பெயர் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ஆலிமாக்களை வைத்து வாரம் ஒரு முறை பயிற்சி வகுப்புகள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் 155 பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.






No comments:

Post a Comment